வயிற்றில் படிக்கட்டு (சிக்ஸ்-பேக்) வைக்க வக்கில்லாத இளைஞர்கள்
பேருந்து படிக்கட்டில் தொங்கி ரோமியோக்களாய் அயோக்கியத்தனம் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாய் இருக்க, இப்போது பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து, மகளிரை வலப்பக்கத்திற்கு இடமாற்றம் என பல நற்செயல்களை அரங்கேற்றி வருகிறார்கள். நாங்க என்ன வச்சிக்கிட்டேவா வஞ்சனை செய்றோம் என்பது போல, பேருந்தில் தொங்கிக்கொண்டு செல்லும் எல்லாரும் கெட்டவர்கள் இல்லை என்ற மனக்குமுறல் தான் இந்த பதிவு. பேருந்து.. விசித்திரம் நிறைந்த பல பயணிகளை சந்தித்திருக்கிறது.. புதுமையான பல ரூட்களையும் சந்தித்து இருக்கிறது.. ஆனால், இந்த பேருந்து ஒன்றும் விசித்திரமானதல்ல... தொங்கி வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமை ஆனவன் அல்ல.. பேருந்து வாழ்க்கை பாதையிலே, தொங்கிப் பிழைக்கும் மங்கிகளில் நானும் ஒருவன். . 29Cஇல் தொங்கிக்கொண்டே வந்தேன் Deluxe பஸ்சிலும் கதவை மூட விடாமல் Footboard அடித்தேன் ஒரு காலேஜ் பெண்ணுக்கு நோட் கொடுத்தேன் குற்றம் சாட்டப்பட்டுருக்கிறேன் இப்படியெல்லாம்.. ஆனால் நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப்போகின்றேன் என்று... இல்லை நிச்சியமாக இல்லை... 29Cஇல் தொங்கிக்கொண்டே வந்தேன்.. ஏன்??? காலேஜ் பிகரை கரெக்ட் செய்யவா? இல்லை. அடுத்த ஸ்டாப்பில் ஏறும் ஸ்டெல்லா ஆன்ட்டி, கீதா ஆன்ட்டி இவர்கள் எல்லாம் படிக்கட்டில் பரிதாபமாக நிற்க கூடாது என்பதற்க்காக Deluxe பஸ்சிலும் கதவை மூட விடாமல் Footboard அடித்தேன் ஏன்..?? விஜய் போல ஹீரோயிசம் காட்டி விஜய் பேன் SMC வித்யாவை கரெக்ட் செய்யவா? இல்லை.. உள்ளே போக முடியாமல் தவிக்கும் நான், மூடும் கதவிலே சிக்கி முகமெல்லாம் ரணகளமாய் ஆகி பரலோகம் போக வேண்டாம் என்பதற்காக அந்த காலேஜ் பெண்ணுக்கு நோட் கொடுத்தேன்.. ஏன்??? பை கொடுத்தால் அவள் கை கொடுப்பாள் என்ற நப்பாசையா? இல்லை குடும்ப பாரத்தை இரக்க வழியின்றி தவிக்கும் நடுத்தர வர்க்கம், தங்கள் முதுகு பாரத்தையாவது இறக்குவதற்காக உனக்கேன் இவ்வளவு அக்கறை??, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்.. நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாகப் பாதிக்கப்பட்டேன், எனது நலத்திலே பொது நலமும் கலந்து இருக்கிறது, என்னை குற்றவாளி என்கிறீர்களே, என் வாழ்க்கை பாதையோடு, பேருந்து வரும் பாதையையும் சற்று திரும்பி பார்த்தீர்களானால் நான் வாங்கிய இடிகள் எத்தனை, மிதிகள் எத்தனை, அடிகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்... நான் ஓட்டுனரை பார்த்ததில்லை, ஆனால் அவர் நல்ல ஆயுளோடு இருக்க வேண்டும் என்று வேண்டினேன் நான் காலியான பேருந்தில் தொங்கியதில்லை, ஆனால் எல்லாப் பேருந்தும் கூட்ட வெள்ளத்தில் தத்தளித்ததைப் பார்த்து வேறு வழியின்றி சென்றேன்.. கேளுங்கள் என் கதையை, என் மேல் கேஸ், அபராதம் போட்டு என்னை அபாண்டமாக அடித்து துவைப்பதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.. இந்தியாவிலே, தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான், பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர், தலைஎழுத்துக்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா??? தமிழ்நாட்டில் பிறந்த நான், அலுவலகம் செல்ல பேருந்து நிலையத்திற்கு ஓடோடி வந்தேன், பஸ், நிற்காமல் இஸ்ஸ் என்று வேகமாய் கடந்து சென்றது. என் பெயரோ பாரத், ஆனால் தொங்கும் வேதாளத்தைப் பிடிக்கும் விக்ரமாய் இல்லாமல் அவ்வேதாளமாய் ஆனேன். நான் மட்டும் நினைத்து இருந்தால் ஹீரோ ஹோண்டா பைக் வாங்கி ஹீரோவாய் சென்றிருந்திருக்கலாம், ஷேர் ஆட்டோ, டாட்டா மேக்ஸீ என்று ஏதாவது ஒரு ஊர்தியில் இடுக்கிக்கொண்டு போயிருக்கலாம், இல்லையெனில் அலுவலகம் பக்கத்திலேயே வீடு வாங்கி, நடந்து சென்றே காலத்தை ஓட்டி இருக்கலாம். ஆனால் அதைதான் விரும்புகிறதா இந்த சமுதாயம். ஹீரோ ஹோண்டா முடியாது, ஆக்டிவா தான் உனக்கும், சென்னை நெரிசலுக்கும் சரி என்று ஆக்டிங் இல்லாமல் அம்மா சொன்னார்கள் . அதுவும் ஒரு வருடம் கழித்தே என்றார்... தொங்கினேன் ஸ்டாப்பில் நிற்காமல் பேருந்தை நூறடி தள்ளி நிறுத்தினான், தொங்கினேன் மகளிர்க்கு தனி வரிசை போல ஆண்களுக்கு இல்லாததால், அங்கேயும் பெண்கள் அமர்ந்திருக்க, வேறு வழியின்றி பாவப்பட்ட மற்ற ஆண்களைப் போல நிற்க ஆரம்பித்தே தொங்கினேன் 600 ரூபாய் பாஸில் இஷ்டம் போல செல்லலாம் என்று 3,4 பேருந்துகளைப் பார்த்தால், அதிலும் சின்ன பொடியன் கூட சிங்காரமாய் படிக்கட்டில்.... தொங்கினேன் 23Cஇல் தொங்கினேன், 24Cஇல் தொங்கினேன், 41Dஇல் தொங்கினேன், 27Lஇல் தொங்கினேன், 147Cஇல் தொங்கினேன், 29Cஇல் தொங்கினேன் தொங்கினேன் தொங்கினேன்.. சென்னையின் பல பேருந்துகளில் தொங்கினேன். தாத்தா, பாட்டி, பியுட்டி இவர்களெல்லாம் தொங்க திறனி இல்லாதவர்கள் என்பதால் இறங்கி வழியும் விட்டேன் என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும், அலுவலக, கல்லூரி நேரங்களை மாற்றிருக்க வேண்டும், பேருந்தில் இன்னும் 18 படிகள் வைத்திருக்க வேண்டும், டீலக்ஸ் பஸ்ஸிற்கு கதவின்றி தயாரித்திருக்க வேண்டும், நான் செல்லும் ரூட்டில் மகளிர்க்கு மட்டும் சிறப்பு பேருந்து இயக்கிருக்க வேண்டும் இன்று என் முன் சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? உள்ளே செல்ல விட்டார்களா இந்த பாரத்தை ..... என்னை தொங்கும் தோட்டமாய் மாற்றியது யார் குற்றம்?? எனது குற்றமா? முதல் படியில் இருந்த என்னை, “தம்பி கொஞ்சம் வழி விடுப்பா” என்று ஒவ்வொரு ஸ்டாப்பிலும் கெஞ்சலாய் கேட்டு கடைசி படிக்கு கொண்டு வந்த ஆண்ட்டிகளின் குற்றமா? டீலக்ஸ் கதவை மூடப்பார்த்து டீலில் விட நினைத்தது யார் குற்றம்? கதவே கண் கண்ட தெய்வம் என்று அதைப் இறுகப்பிடித்த எனது குற்றமா? காலியாக இருக்கும் போது திறந்து வைத்து கூட்டம் வரும் போது மூட நினைக்கும் கடமை உணர்வு மிக்க ஓட்டுனரின் குற்றமா? காலேஜ் பிகர் நோட் வாங்கியது யார் குற்றம்? CAN YOU PLEASE HAVE IT? என்று பீட்டர் இங்கிலாந்து ஷர்ட் போட்டு பீட்டர் விட்ட எனது குற்றமா? இல்லை ஸ்மார்ட்டாய் இருக்கும் என்னை சைலண்டாய் ரசிக்க நோட் வாங்கிய அவளின் குற்றமா?? இந்த கூட்டங்கள் எல்லாம் களையப்படும், குறையப்படும் வரையில், என்னை போன்ற பாரத்து....கள் தொங்கிக்கொண்டே தான் இருப்பர்....
மெசேஜ் : சரி, என்ன மேசேஜ் சொல்றன்னு கேக்குறீங்களா? ஏன்டா எல்லாத்துலயும் மேசேஜ்ஜ பாக்குறீங்க?
சரி, படியில் பயணம், நொடியில் மரணம், அதனால் வேண்டும் கவனம். எப்பூடி?...
இப்படிக்கு உங்கள் லொள்ளு பாரத்.....