திரேதா யுகத்தில் நான் கடவுளின் மகவாகப் பிறந்திருந்தேன் என்பதை இப்பொழுது உங்களுக்கு நினைவுபடுத்துவது இந்தக் கதைக்கு பொருத்தமாயிருக்கும் என நம்புகிறேன்.
வரிக்குதிரை பிறந்த கதைக்கும் திரேதா யுகத்தில் நான் பிறந்ததற்கும் ஒரு நீண்ட நெடும் வரலாற்றுத் தொடர்புண்டு.
திரேதா யுகத்தின் மார்கழி மூன்றாம் நாள் அர்த்த ஜாமத்தில் பூமியே அதிரும்படியான ஒரு குழந்தையின் அழுகைச்சத்தம் கேட்டது. அப்படி ஒரு அழுகையை இது வரையிலும் இப்பூவுலகம் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. காட்டில் ஒன்றோடொன்று சண்டையிட்டு கண்களில் தீ ஜுவாலையைக் கக்கிக்கொண்டிருந்த இரு சிங்கங்கள் இந்த அழுகையைக் கேட்டுத் தத்தமது கோபத்தை மறந்து பயத்தில் நடுநடுங்கின.இருள் கூட விரைவாக ஓடி விட வேண்டுமென இறைவனிடம் வேண்டிக்கொண்டது. ஆம் அப்பொழுதுதான் கடவுளின் முதல் குழந்தையாக நான் பிறந்திருந்தேன்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துவந்தேன். என் வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்தது என்று கூறுவது இங்கு சிறந்த உதாரணமென்றாலும் கடவுளின் குழந்தையாகப் பிறந்துவிட்டதால் அசுரவேகம் என்பது இப்பொழுது மட்டும் சரியாகாது.
எனக்கு 3 வயதிருக்கும் போது LKG அனுப்பத்திட்டமிட்டிருந்தார் எனது தாயார். ஆனால் அப்பொழுது அந்த வசதியில்லாமற் போகவே 5 வயதாயிருக்கும்போது எங்கள் நாட்டிலிருந்த சிறந்த ஒரு குருவிடம் கல்வி கற்பதற்காக அனுப்பினார்கள் என்னை.
முதல் நாள் எனது குருகுல வாசம் மிகச்சிறப்பாகவே இருந்தது எனக் கூறலாம். ஆனால் இது நடந்து கோடான கோடி வருடங்களாகிவிட்டதால் என்னால் சரியாக நினைவுபடுத்திக் கூற இயலவில்லை.அப்பொழுது ஜுனியர் ஹார்லிக்ஸ்சும் இல்லாததால் நான் TALLER,STRONGER,SHARPER ஆவதற்கான வாய்ப்புகள் எனக்கு அளிக்கப்படவில்லை.
இரண்டாம் நாள் என் குருகுலத்தில் நடந்த அந்த நிகழ்ச்சிதான் வரிக்குதிரை என்ற ஒரு புதிய இனம் உருவாகக் காரணமாயிருந்தது. ஆம் நான் சரியாக வீட்டுப்பாடம் எழுதாதைக் கண்டு என் குலகுரு அவரது கண்களை வியாழன் கோள் அளவு பெரிதாக்கி அதனைச் செவ்வாய்க் கோள் போலச் சிவக்க வைத்து என் முதுகில் ஓங்க ஒரு குத்து விட்டபடியே கேட்டார்“ஏன்டா TWO RULE,FOUR RULE எழுதல?"
அப்பொழுது “ TWO RULE " என்ற ஒரு வகையான நோட்டுப்புத்தகங்களே கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை அந்த அப்பாவி ஆசிரியர் அறிந்திருக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் அவரின் அந்த அடிதான் வரலாற்றில் ஒரு புதிய உயிரினத்தையும் உருவாக்கும் என்பதையும் அறியாமல் கோபக்கனல் தெரிக்க என்னைப் பார்த்துகொண்டிருந்தார்.
நான் அழுதுபுரண்டு கொண்டே வீட்டிற்குச் சென்றேன். அவரைப் பழிக்குப் பழி வாங்க வேண்டுமென எனது தந்தையான கடவுளிடம் முறையிட்டேன். ஆனால் சாந்த சொரூபமான , கருணையே உருவான அவர் சொன்னார் “ ஆசிரியரை அடிக்க நினைப்பது பெருங்குற்றம். ஒருகாலும் நான் இதை ஒப்புக்கொள்ள மாட்டேன்.காலையில் உனக்கு வரி போட்ட நோட்டு வாங்கித் தருகிறேன் ” என்று கூறிவிட்டு தியானத்தில் ஆழ்ந்தார்.
மறுநாள் காலையில் நானும் எனது தந்தையும் வரிப்போட்ட நோட்டிற்காய் உலகெங்கும் வலம் வந்தோம். கிடைத்தபாடில்லை. கடுங்கோபமடைந்த என் தந்தை “எல்லாம் வரியாகப் போகக் கடவது” என்று சபித்துவிட்டார். அப்பொழுதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தேறியது.
உலகமே வரிமயமானது. வரி மனிதர்கள், வரி யானைகள், வரி நோட்டுகள் , வரி சிங்கங்கள், வரி மலைகள் , வரி கொசுக்கள் , வரி வரியான நத்தைகள் , வரிப் பூரான்கள் இன்னும் ஏன் வரி வைரசுகள், வரி பாக்டீரியாக்கள் , வரி ரத்தச் சிவப்பணுக்கள், வரி ரத்த வெள்ளை அணுக்கள், வரி நியூட்ரான்கள், வரி எலக்ட்ரான்கள், வரி புரோட்டான்கள், வரி ஹிக்ஸ் போஸான் துகள்கள் என பூவுலகில் இருந்த அனைத்தும் வரிவடிவமாகிவிட்டிருந்தது. எங்கள் குருவும் இதற்கு விலக்காகவில்லை. அவரது உடலும் வரிவரியாக மாறியிருந்தது.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த எனது குரு ” என்னை மன்னித்துவிடுங்கள் பிரபு, மாபாதகம் செய்துவிட்டேன் , மன்னித்தருளள் வேண்டும், உங்கள் சாபத்தை திரும்பப்பெற்றுக் காத்தருளள் வேண்டும், அடியேனை ரட்சிக்க வேண்டும் ” என்றவாரு என் தந்தையின் பாதங்களைப் பிடிக்கவந்தார்.
” குருதேவா ,என்ன காரியம் செய்கிறீர்கள்.? நீங்கள் என் கால்களைப் பிடிப்பதா? இதைவிடப் பெரிய பாவம் எனக்கில்லை! “ என்றவாரு விலகிக் கொண்ட என் தந்தை “ எனது சாவம் விமோசனம் பெற இந்தக் குடத்தில் உள்ள நீரை எல்லா உயிர்கள் மீதும் தெளித்தால் போதும் “ என்று கூறிவிட்டு ஒரு வீரனையும் அவனுக்கு ஒரு குதிரையும் கொடுத்தனுப்பினார்.
அவ்வீரனும் பூலோகம் முழுவதும் சுற்றி எல்லா உயிர்கள் மீதும் தெளித்துக் கடவுளின் சாபத்தைப் போக்கினன். ஆயினும் அவன் ஏறிச் சென்ற குதிரையை மறந்தனன்.அதன் மீது தெளிக்காமல் விட்டுவிட்டதால் அதன் உடல் அப்படியே வரிவரியாய் நிலைத்துவிட்டது. அந்த வரிக்குதிரையின் சந்ததிகளே இன்றும் வரிக்குதிரைகளாய் வாழ்ந்து வருகின்றன.
இத்துணை நேரமும் இதைக் கவனமாகப் படித்த உங்களை வாழ்த்தி வணங்கி விடைபெறுகிறேன், நன்றி வணக்கம்.
நீதி : இத நீங்க நம்புனா அதுக்கு நான் ஒன்னுமே பண்ணமுடியாது :)
Wednesday, August 22, 2012
Thursday, August 2, 2012
பேஸ்புக் லொள்ளுகளின் தொகுப்பு..!2
72.காலம் எவ்வளவு தான் மாறினாலும்,லீவ் லெட்டர்ல எழுதுற காரணம் மட்டும் மாறல # As i am suffering from fever.... :)
73.இன்னும் 15 நாளில் கூடங்குளம் மின்சாரம் கிடைச்சிடும்-நாராயணசாமி # திரும்ப திரும்ப பேசுற நீ! திரும்ப திரும்ப பேசுற நீ!
74.சில நேரங்களில் என் முகத்தில் அறைந்து காரி உமிழும் யதார்த்தங்களிடம் நான் கோபம் கொள்வதேயில்லை...
75.எதிர்பார்த்த அளவுக்கு எதையும் சாதிக்கவில்லை - மன்மோகன் சிங் # ஆனா எதிர்பார்க்காததுக்கு மேலேயே சோதிச்சுட்டீங்க...
77.சோதனை சாவடிகளை நவீனபடுத்த 33 கோடி - முதல்வர் # மொதல்ல அங்க தூங்குற போலீஸ எழுப்பிவிட ஆளுக்கொரு அலாரம் டைம்பீஸ் வாங்கி கொடுங்க!!
78.சிறு வயதில் என் தாயிடம் நான் உணர்ந்த பாதுகாப்பை,முதுமையில் என் தாய்க்கு உணர்த்திவிட்டால் போதும், என் மரணம் மகிழ்ச்சியாய் இருக்கும்!
79.மூட நம்பிக்கைகளில் விளையும் செயல்பாடுகள், கடவுளின் கவன ஈர்ப்பை பெற்றுத் தரும் என்ற பேராசையில் செய்யப்படும் கோமாளிதனங்கள்.
80.கவிதையும், மேக்கப்பும் ஒருவகையில் ஒன்னு தான், அழகில்லாத சில பொருட்களுக்கு அழகு சேர்ப்பதனால்!!
81.பெண்கள் கிராஸ் செய்கையில், ஆண்கள் அனைவரும் 'மேற்பார்வை'யிட்டு மேனேஜர் ஆகிவிடுகிறார்கள்!!
82.தமிழ் ஈழத்தை உருவாக்கிவிட்டுத்தான் இறப்பேன்-கருணாநிதி#கட்,கட்!இன்னும் கொஞ்சம் எமோசனோட,மூஞ்சிய பாவமா வச்சுட்டு ஒன்மோர் டேக் போலாம் தலைவா...
83.திருவிழாவில் காணாமல் போனது அந்தகாலம் இப்போ திருவிழாவே காணாமல் போய்கொண்டிருக்கிறது...!
84.ஆண்-பெண் இடையே உள்ள நட்பு, ஆணுக்கு பிடித்திருந்தால் காதலாக மாறும்! பெண்ணுக்கு பிடித்திருந்தால் நட்பாகவே தொடரும்!
85.நல்லவேளை "மறதி"னு ஒரு வார்த்தை இருக்கு இல்லனா நான்லாம் ரொம்ப கஷ்ட்டப்பட்டிருப்பேன் !
86.பேனா நிப்பை வைத்து.. மேஜை மேல் நண்பன் கடனாக கொடுத்த மை துளியை உருஞ்சும் சுகத்தை இந்த காலத்து மாணவர்கள் அனுபவிப்பதில்லை...
87.எவ்வளவு முயற்சி பண்ணாலும் கல்தோசைக்கும், ஊத்தாப்பத்திற்கும் ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியல!
88.சைவம் சாப்பிட்டா ஆயுள் அதிகமாம். புல்லு மட்டும் தின்ன ஆட்டுக்கு இந்த வாக்குப் பலிக்கல.
89.ஒரு ஆம்பள கேட்டவுடனே, மதிச்சு, பதில் சொல்ற ஒரே ஆளு கூகிள் மட்டும் தான்.!
90.கன்னித்தீவு முதலில் முடியுமா அல்லது சரவணன் மீனாட்சி திருமணம் முதலில் முடியுமா?
91.சிறிதும் வலி இல்லாமலே பிரிந்து சென்றுவிட்டாய்... எனில் நாம் இதுவரை செய்தது காதல் அல்ல காலவிரயம்
92.'தீய சக்தியை' ஒழித்த 'தீய சக்தினு' வேணா ஜெயலலிதா ஆட்சியை குறிப்பிடலாம்...
93.வயிறெரிஞ்சு சொல்றேன்....
சாம்பார் ரொம்ப காரம்!
94.B.E படித்துவிட்டு வேலை கிடைக்காமல் BPOவில் சேர்ந்த இளைஞர்களே, அது ஸ்டாப்-கேப் தான்..அங்கேயே இருந்து விடாதீர்கள்...
95.பிரச்சனைகளை கண்டு நான் ஒரு போதும் ஒதுங்கியது கிடையாது! ஓடிவிடுவேன்!!:-)))
96.மனசாட்சி இல்லாத பெண்களின் நுனி நாக்கில் அண்ணா எனும் வார்த்தை எப்போதுமே இருக்கு.. அவ்வ்
97.பணம் பேசுகிற போது இங்கே யாரும் இலக்கணம் சரிபார்ப்பதில்லை...!
98.தூக்கம் வராதப்பவும்,வேலை இல்லாதப்பவும் டுவிட்டர் என்னை இழுக்குது!! ச்சே!!
99.வீட்டில் 4 தோசைக்கு மேல் தொடர்ந்து சாப்பிட்டால் , தோசை தடித்துக்கொண்டே செல்கிறது.
100.பிழைக்கத்தெரியாதவன் என்று அழைக்கப்படுபவர்கள் எல்லாம்,நன்றாக வாழத்தெரிந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்
101.ஆப்லைனில் இருக்கும் நண்பனை கண்டறிய ஒரு பெண் ஸ்டேட்டஸ் போடும்வரை காத்திருக்கவேண்டும். தீயா லைக் & கமெண்ட் பண்றாங்கப்பா
102.சம்பளம் போட்டு ரெண்டுவாரம் ஆச்சு. முதல்தேதி வரைக்கும் டெபிட் கார்ட மன்மோகன் சிங் மாதிரி அமைதியா ஒரு மூலைல வைக்கவேண்டியதுதான்
103.நான் பஸ்ஸை விட்டு இறங்கியதும் சூப்பர் பிகர் பஸ்ஸில் ஏறுவது நியுட்டனின் எந்த விதியில் சேர்த்தி? #தலைவிதி
104.என் ஹேர் கட்டிங்க 4 பேர் நல்லாயிருக்குன்னா 8 பேர் துப்புறாங்க#என் முடிவு 4 பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல...
105.வரதட்சனையை மாமியாரும்,வர்ற தட்சனையை சாமியாரும் வேண்டாமென்று சொல்வதில்லை!
106.கருணாநிதியைச் சுற்றித்தான் தமிழகத்தில் அரசியல் பண்ண முடியும்-இளங்கோவன் # ஏன் அவரு என்ன புள்ளையாரா? இல்ல அரசமரமா?
107.பையன் போட்டோ பொண்ணு வீட்டுக்கும், பொண்ணு போட்டோ பையன் வெட்டுக்கும் போறதுக்கு முன்னால ரெண்டுமே Photoshop போயிட்டு வந்திடுதுங்க.!
108.வெகுநாள்வரை,தாராளமயமாக்கல் என்பது சினிமா சார்ந்த சொல் என்றே நினைத்திருந்தேன்!
109.முக்கியமான ஒன்ன டிவில கூர்ந்து கேட்க்கும் போது மிக்சிய ஆன் பன்றது பழிவாங்குவதின் உச்சம்
110.சோனியா: ஏன்டா டைம்ஸ் ஆப் இந்தியாவ கிழிச்சீங்க? ஞானதேசிகன்: நான் டைம்ஸ்.... ன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள ஓடிட்டாய்ங்க மேடம்.
111. TIMEக்கு பதில் Times of Indiaவை கிழித்த காங்கிரஸார் #நல்லவேளை தாராசிங் செத்ததுக்கு ம.மோ.சிங் வீட்டுக்கு மலர்வளையத்தோட போகல
112.மாமு, மச்சி, மாப்ள எல்லாம் சாதாரண வார்த்தைகள் அல்ல, சாதிய சமூக அந்தஸ்தை அழிக்கும் சக்திமிக்க வார்த்தைகள் ;)-
113.உங்களுக்கு தெரியாதது எதையும் நான் சொல்ல போவதில்லை. அதை நீங்கள் ரசிக்கும் வகையில் சொல்வதில்தான் என் வெற்றி
114. பெண்களுக்குத்தான் அது "தியாகராய நகர்", ஆண்களுக்கு "திவால் நகர் "
115.பின்னாடியே வந்து ஜொள்ளுபவரை விட திரும்பி பார்க்காமல் போகிறவரை பற்றி தான் சிந்திக்கிறார்கள் பெண்கள்...
நான் சொல்றது உண்மை தானே...
116.மூஞ்சி முழுக்க சோப்ப போட்டுட்டு, தண்ணிக்காக "கப்"ப தேடுறதுதான் கையறு நிலையோ ???
117.விடுதலை புலிகளால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து#அட நொண்ணைகளா உங்களால வர்ற ஆபத்து தான்டா அதிகம்
118.என்பேச்சை கேட்பவன் அனைவரும் முட்டாள்கள் என்ற நினைபுடனே பேச தொடங்குவேன்:சர்ச்சில்#இங்க கருணாநிதியின் நினைப்பும் அது தான்
119.10 ரிக்டர் மேல பூகம்பம் வந்தாலும், அரசு பேருந்தில் பயணித்தால் ஒரு வித்தியாசமும் தெரியாது!
129.இந்திய வாழ்க்கையை ஒரு வரியில் விமர்சிக்க வேண்டுமென்றால் 'நாளைக்கு இன்று பரவாயில்லை' :)-
130. பல்பு கண்டுப்பிடித்த எடிசன் எவ்வளவு பல்பு வாங்கியிருப்பாரோ!
131.கோபிநாத்த நிறையப்பேர் ஏன் திட்றாங்கனு இப்ப புரியது மனுசன் புத்திசாலியா இருக்காறு, ஒரு புத்திசாலிக்கு இன்னொரு புத்திசாலிய புடிக்காதே!
132.இந்தியாவுல, சுதந்திரம் பெற்றதிலிருந்து விலை ஏறாம இருக்கிற ஒண்ணே ஒண்ணு அட்வைஸ் மட்டும் தான் # 24 X 7 ஃப்ரீ
133.நடக்க நடக்க வயிற்றுக் கொழுப்பு குறையும்...
பேச பேச வாய்க்கொழுப்பு குறையுமா...? #fbquotes
134.வயிற்றை கலக்கி வாய் வழி வந்தால் அது ‘வாந்தி‘...
வாய்வழி வந்து வயிற்றைக் கலக்கினால், அது ‘வதந்தி‘...!
135.விக்கல் வந்தால் நம்மை எல்லோரும் நினைப்பார்கள்...
சிக்கல் வந்தால் நம்மை எல்லோரும் மறப்பார்கள்...!
136.விஜயகாந்த்தை விட மாட்டேன், அவர் ஜெயித்த தொகுதிக்கெல்லாம் போவேன்: சரத்குமார் # போயி பஞ்சாயத்து பால்டாயல் குடிச்சுட்டான்னு சொல்றதுக்கா??
137.தொட்டி மீனுக்கு ஒரு போதும் மீனவன் வலை வீசுவதில்லை@!!சிட்டி கேர்ள்"ஸ்!!!@
138.எதிரிக்கு நேரம் சரியில்லைன்னா "வாழ்க்கை ஒரு வட்டம்டா"ன்னு சொல்வோம்! நமக்கொரு கஷ்டம்னா 'கட்டம் சரியில்ல'ன்னு சொல்வோம்!
139.நம்மைக் கடிச்சு இரத்தம் உறியும் மூட்டைபூச்சியை படீர்னு அடிச்சுத் தேய்ச்சு, அந்த இரத்தத்தை தெனாவெட்டா ரசிச்சா ’நீயும் என் போன்றே GULF வாழ் வீரன்தான்!’
140.இன்னக்கி டவுட்டு..கணம் நீதிபதி அவர்களே, கணம் நீதிபதி அவர்களேனு சொல்றாங்களே நீதிபதி அவ்ளோ கணமாவா இருப்பார்.
141.கூலிக்கு படுக்கும் விலைமாதுகளிடமிருக்கும் தொழில்நேர்த்தி, வரதட்சணைக்கு படுக்கும் கணவான்களிடம் இல்லை ஏனோ!
142.விடை கிடைக்காத பல கேள்விகளுக்கு பதில் அறிவதை விட நம்பிக்கை வைப்பது சுலபம்... நம்ம கடவுள நம்புற மாதிரி..
143.மேனேஜர்ஸ் எல்லாம் மல்டி டாஸ்கிங்க் பண்றதா நினச்சிட்டு மல்டிபிள் பெர்சினாலிட்டியா திரியிறாங்க...
144.முத பஸ்ஸில் போயி கடைசி பஸ்ஸில் வந்து கூடு அடையும் நகர வாழ்க்கை. #ஒரு ஈசலின் வாழ்நாள் முடிந்திருக்கும்...
145.ஹோட்டல் சர்வருக்கு கைக்கெட்டுவது வாய்க்கு எட்டுவதில்லை...
146.தேநீர் அருந்தும் நேரம் அளவே அவளைப் பார்த்தது எனினும் விருந்து உண்ட அளவிற்கு மனம் உள்வாங்கிக்கொண்டது.
147.அடுத்த நமிதாவாக ஹன்சிகா ஆகும் காலம் விரைவில்.
148.பலபேருடைய ஃபோன்கள் கடமைகளை விட கடலைகளுக்காகவே அடிக்கின்றன...
149.சிவப்பு என்பது அழகல்ல, நிறம். ஆங்கிலம் என்பது அறிவல்ல, மொழி.
150.இந்த IT கம்பெனியில் வேலை பார்ப்பவர்கலெல்லாம் டீசன்டாதான் தெரிகிறார்கள்... ஷுவை கலட்டும் வரை.. #போய் சாக்ஸ தொவைங்கடா...
151.அமுத்துனா பூட்டிக்கிற பூட்ட வாங்குறவங்க, ஞாபகமறதி இல்லாதவர்களாக இருப்பது அவசியம்..
152.ஓபிஎஸ் : நம்மள நம்பி தோத்த சங்மாவுக்கு என்ன செய்யப்போறீங்க? அம்மா : இதுவரை உங்களுக்குக்கெல்லாம் என்ன செஞ்சேனோ அதான்..
153.ராமனுக்குக் கூட 14 வருஷங்கள் மட்டும்தான் வனவாசம்.
பெருநகரங்களில் குடியேறிய பலருக்கு திரும்பிப் போக எந்தக்
காலக்கெடுவும் இல்லை...
154.நாய காப்பாத்த சட்டைய கழட்டீட்டு ஓடுற சரத்குமார் கடைசியா ஒரு எருமைய(ஹார்ன் அடிச்சும் நகராத) காப்பாத்திடறார்# பூமெக்ஸ் பனியன்
155.அடிக்கரும்பின் ருசியறிய நுனிக்கரும்பிலிருந்து ஆரம்பிக்கவேண்டும்...
எதோ சொல்ல வந்து சரியாய் சொல்லாத மாதிரி இருக்கு...ரைட்டு விடு...
156.இரட்டை அர்த்தத்தில் பேசுபவர்கள் கெட்டவர்கள் என்றால் அதை புரிந்து கொள்பவர்கள் கெட்டவர்களாகத்தானே இருக்க முடியும்!:-)))”
157.பிரணாப் முகர்ஜிக்கு ராமதாஸ் வாழ்த்து # ஹலோ MR. வைத்தியநாதன் ,ஏற்கனவே உங்கள நான் டெல்லில மீட் பண்ணி இருக்கேன்...
158.பொண்ணுங்க பீட்டர் விடனும்'ன்னு முடிவு பண்ணிட்டா, சித்தப்பாவையும் ஷித்தப்பா'ன்னு தான் சொல்றாங்க!
159.மனிதனின் `திமிர்`...இறந்த பிறகும் அடங்குவதில்லை..செத்த பிறகும், என்ன `விறைப்பு`வேண்டிக் கிடக்கு?
160."சுனாமி"க்கு அப்புறமா "அலை"கடலென திரண்டு வாரீர் கோஷத்தை யாரும் யூஸ் பண்றதில்ல போல...!!!!
161.சண்டையோ, விவாதமோ முடிஞ்சு ரொம்பநாளைக்கு அப்புறம் தான் சூப்பர் சூப்பர் பாயிண்ட்ஸ் கிடைக்கிறது என்ன வினோதமோ?
162. நீ கடக்கும் தெருவில் நானிருக்கிறேன் என்பதே போதுமானதாய் இருக்கிறதெனக்கு
163.தவிப்பின் கீதம் வாசிக்கிறது விழுங்கும்w எச்சில் சத்தம்...
164.கிறுக்கியதெல்லாம் கவிதையல்ல கிறுக்கி உன்னை பார்த்ததும்... கிறுக்கியதெல்லாம் கவிதை...
165.எப்பவாவது தான் அம்மா நம்மிடம் குழந்தை போல அடம்பிடிப்பார். வாழ்க்கைல யாருமே மிஸ் பண்ணக் கூடாத அற்புத தருணம் அது!
166.என் உருவத்தை வைத்து யாரும் என்னை எடைபோட முடியாது! காரணம்,நான் முரண்பாடுகளின் மொத்த உருவம்!!
167.புதிய நண்பர்கள் பழைய நண்பர்கள் போல இருப்பதில்லை என நினைப்பது நான் மட்டுமா?
168.அறிவை வளர்க்க நினைத்தால் பதிலை எதிர்ப்பார்க்கக்கூடாது! வெறும் கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்கணும்! நான் சொல்வது சரியா?
169.1000 ரூபாய் கேள்வி கேட்டான் பாரு சூர்யா ராதா கிட்ட.#அய்யோ ராமா??
170.2012 படத்த ஸ்டார் மூவிஸ்ல 2012 தடவ போட்டு ரெக்கார்ட் பண்ணாம உட மாட்டானுங்க போல.
171.வேற்றுக்கிரகவாசி என்பவன் சாலையில் அடிபடும் மனிதர்களை வேடிக்கை பார்ப்பவன் .."
172.சூப்பர் பிகர பாத்துட்டும் ஒருத்தன் சும்மா போனான்னா அவன் ஏற்கனவே அடிவாங்கிருக்கானு அர்த்தம்...
173.இவரு சனாதிபதி ஆக நாங்க 1 ஓவாய் அழனுமா நல்லாயிருக்குடா உங்க ஞாயம். #பெட்ரோல் வில
174.பஸ்ல/ட்ரெயின்ல ஏறினதும் சீட் இருக்கான்னு பாக்றவன் மனுசன், பிகர் இருக்கான்னு பாத்தா அவன் பெரிய மனுசன்.
175.'சிரிச்சே சமாளிப்பதிலும்' , 'அழுதே சாதிப்பதிலும்' எப்பவும் பெண்கள் "Distinction"
176.ஊருல இருக்கைல புல் கூட்டத்துல பஸ்ல ஏறி அடிச்சி புடிச்சி சீட்ல செட்டில் ஆய்ட்டோம்னா ஏதோ லைப்லயே செட்டில் ஆன மாதிரி பீலிங்.
177.கல்லூரி நாட்களில் நாம் ஒவ்வொருவரும் நண்பர்களுக்காக ஏதோ ஒன்றை கண்டிப்பாக இழந்திருப்போம் #கோவம்,மானம்,சூடு,சொரணை
178.வயிறு நெரஞ்சு வந்தா ஏப்பம்! வயிறு எரிஞ்சு வந்தா சாபம்!
179.காலை நேர வெயில் என்பது சிறுபிள்ளையின் கோபத்தினால் விழுந்த அடிபோன்றது.வலியிருப்பினும் சுகமானது!
180.நகரங்களில் மனிதம் குறைகிறது என்ற குற்றச்சாட்டுக்கு பெரிதும் காரணமானவர்கள் அந்த நகரத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் அல்ல!
181.மனநிறைவு என்பது அனைத்தையும் சேகரிப்பதில் இல்லை, அனைத்தையும் விட்டு விலகுவதில் இருக்கிறது....."
இன்னக்கி காலண்டர்ல இது தான்பா போற்றுந்துச்சு....
182.அவசரக்காரன் Scooty-யை முந்துவான்...,
அறிவாளி ஐந்தடி பின்செல்வான் !
.
.
.
.
.
.
#திருலொள்ளுவர்...
183.உனக்கு சரிக்கு சமமாக விவாதம் செய்பவனை "எதிரி"யாக்கி விடு!!!
#நண்பனாக்கிட்ட கூட இருந்தே கொல்லுவான்!!!!#்
184.எல்லை மீறுபவர்கள் நம் எல்லைக்குள் இருப்பவர்களே!
185. "ஜன்னலை" திறந்து காற்று வாங்குவதில்லை யாரும்...
"பேன் "சுவிட்சையே தேடுகிறோம்
#நவீனமயம்#
186.என் பொய் "கண்டுபிடிக்கப்"பட்ட பின்னர்...அதற்கு முன் நான் சொன்ன அத்தனை "உண்மை"களும் சேர்த்தே கேள்விக்குறியாக்கப்படுகிறது!!!!
187. காலங்காத்தால தத்துவம் .அப்புறம் கவித..அப்புறம் கதை..அதுல peter english.கடைசியா "அப்பாலிக்கா"னு கலீஜூ லாங்குவேஜ் ல முடிச்சுகிறாங்க.#போங்கடே
188.எங்கம்மா என்ன கலாய்க்கிறாங்களா இல்ல உண்மைய சொல்றாங்களான்னே தெர்ல 'வேல வேலன்னு சாப்டாம உடம்ப கெடுத்துக்காதடா'"
189.இப்போ இசையறுவில வர ஆங்கரின் முகத்துல அடிச்சிருக்கிற பெயிண்ட் நெரோலாக்கா ஏசியன் பெயிண்ட்டா #டவுட்டு
190.ஆண்களோட முகம் 'பளீச்'ன்னு தெரியுறதுக்கு எந்த கிரீமும் தேவையில்லை! ஒரு பத்து நாளைக்கு அப்புறமா ஷேவ் பண்ணாலே போதும்!
191.அரசு பஸ்ல ஏற புடிக்கல,அரசு பள்ளில படிக்க புடிக்கல,அரசு மருத்துவமனை போக புடிக்கல,ஆனா அரசு வேல மட்டும் புடிக்குது..இது என்ன மாதிரி லாஜிக்...
192.ஈழம் பார்க்காமல் சாகமாட்டேன் - மு.க # இப்ப ஏன் ஈழம் ஈழம்னு இந்த ஈனம் கத்துது?
193."நீதிதேவதை "ரேசன் "தராசை"யே வைத்துள்ளது போல...#எல்லாம் கூட்டி குறைச்சே தீர்ப்பு சொல்லுது.
194.ஆட்டோ டிரைவரின் லொள் வாசகம் - கர்ப்பிணிப்பெண்களுக்கும்.அப்படி ஆக நினைக்கும் பெண்களுக்கும் இலவசம்..
195.விபத்தும் மகிழ்ச்சியை தரும். . !
மோதுறது பஸ் ஆக
இல்லாமல்
மிஸ் ஆக இருந்தால்.
196.சட்டங்கள் கடுமையாக்கப்படும் போது லஞ்சமும் அதிகமாக்கப்படுகின்றது.
197.ஒரு தேர்தல் முடிவு வெளியிடும்போதெல்லாம் பெட்ரோல், கியாஸ் விலை உயர்கிறது:
198.குஜராத்தில் மதுவிலக்கு நடந்துக்கொண்டிருக்கிறதென நம்புபவர்கள் நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடற்க முழுதும் படிக்காதவர்கள் :(
199.தமிழ்நாட்டில் இருப்பது மின்விளக்கு அல்ல. மின் விலக்கு.
200.தேசபக்தி என்பது குஜராத் பூகம்பத்துக்கு பழைய துணி அனுப்புவது, கார்கில் போருக்கு காசு வசூலிப்பது, அப்புறம் தோனி ஃபோருக்கு கைதட்டுவது :)-
இப்படிக்கு உங்கள் - லொள்ளு பரத்©

Subscribe to:
Posts (Atom)