Thursday, June 14, 2012

என்ன கொடும சார் இது...

உலகத்துலேயே ரொம்ப கொடுமையான விஷயம் எது தெரியுமா ?? நமக்கு புடிச்சவங்க நம்மள விட்டு போறது தான்.. அதுவும் லவ் பண்ணவங்க "நீ வேணாம், என்னை மறந்துடு", நோ சொல்லிட்டு போறத பார்த்துட்டு நிர்க்குறான் பாரு அந்த ஒரு நிமிஷம் மனசுல ஏற்படுற வலி இருக்கே,அது சாவ விட மோசமானது... இந்த டயலாக்க உன்னாலே உன்னாலே படத்துல வினை சொல்லுவாரு...

இதெல்லாம் கொடுமையான விஷயம் கேடயதுங்க...வெளிநாட்டுல ஒரு இந்திய உணவு விடுதி தேடி புடிகேறதே பெரிய விஷயம்...அதுலயும் அங்க இடம் புடிச்சு அப்பாடான்னு...உக்காந்தாலும் எப்ப வேய்டர் வருவான்னு...காத்து கேடகனும்...அப்படி தாங்க இன்னக்கி ஒரு ஹோட்டல்ல எனக்கு ஒரு கொடும நடந்துச்சு..ஒரு வழியா வெய்ட்டர் வந்தான் உங்களுக்கு என்ன வேணும்னான்...எனக்கு எதுத்த டேபிள்ள ஒரு நார்த் இந்தியன்...மொரு மொறுன்னு ஒரு நெய்ரோஸ்ட் சாப்டுட்டு இருந்தான்...அத பாத்த உடனே அப்பாட இன்னக்கிஆவது தோச சாபுற்றலாம்னு நம்பி ஒரு தோச ஆர்டர் பண்ணேன் அவனும் வருவான் வருவான்னு ஒரு முக்காமநிநேரம் காத்து கெடந்தேன்...அவனும் வந்தான்...அவன் கிட்ட வந்து "சார் மாவு தீந்துருச்சு ...ரவா உப்மா தான் சார் இருக்குன்னு" சொல்லிட்டு போறத பார்த்துட்டு நிர்க்குறான் பாரு அந்த ஒரு நிமிஷம் மனசுல ஏற்படுற வலி இருக்கே,அது சாவ விட மோசமானது...ங்க...நான் கொஞ்சம் ஓவரா சொல்றேன்னு தானே நெனைகுரிங்க நீங்களும் இந்தியாவ விட்டு வெளில வந்து பாருங்க இது எவளவு பெரிய கொடுமைன்னு தெரியும்..

இப்படிக்கு உங்கள் லொள்ளு பரத்...

No comments:

Post a Comment