Saturday, July 7, 2012

பேஸ்புக் லொள்ளுகளின் தொகுப்பு..!

என்னை பற்றி சொல்வதற்கு ஒண்ணுமே இல்லை. இருந்தாலும் நான் சொல்கிறேன். ஒரு ரஷிய நாட்டு பழமொழி ஒன்னு இருக்கு அதாவது "ஒரு உண்மைக்குள் ஆயிரம் ஆயிரம் ரகசியங்கள் உண்டு". என்னதான் ஒருத்தன் உண்மை சொன்னாலும், அதில் கொஞ்சமாச்சு கொக்கு மக்காய் சில பொய்கள் ஒளிந்து இருக்கும். சரி இதை நான் எதுக்கு சொல்லுறேன்ன்ன வர வர என் பதிவில் கருத்துக்களே இல்லை என்று ஒருவர் ஈமெயில் அனுப்பிருந்தார்...

நான் படிக்க விரும்பியது ஓவிய கல்லூரில,,,ஆனால் படிக்க முடியவில்லை.இதற்கு என் வீட்டில் யாரும் காரணம் இல்லை..இதற்கு நாணே தான் காரணம்.ஊருல இருக்க ஒரு நாய் சொன்னுச்சு பயோ டெக் படிச்சா நீ எங்கயோ....!!போயுருவ அப்புடின்னு சொன்னுச்சு..படிச்சு முடிச்சு ரெண்டு வர்சமாச்சு இந்தா இருக்க மெட்ராஸ் கூட தாண்டல...அந்த பொரம்போக்க தான் தேடிகிட்டு இருக்கேன்...அந்த ஏமாற்றத்தை இன்றளவும் என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை.


நான் நிறைய புத்தகங்களை படிப்பேன், ஆனால் அதை பற்றி பேச பிடிக்காது. என்னை எப்பொழுதும் முட்டாளாய் காட்டிக் கொள்ள பிடிக்கும்.அனால் அப்படி நடபதில்லை...


நான் ஒரு தீவிர கம்யுனிஸ்ட்... ஆனால் எது சோறு போடுகிறதோ நான் அந்த பக்கம் இருப்பேன்...


மகாபாரதம், ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம்,கொஞ்சம் கொஞ்சம் பைபிள் திருகுரான் ஆகிய நூல்களையும் பல முறைக்கு மேல் படித்து இருப்பேன். இருந்தாலும் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.



நான் ஒரு தனிமை விரும்பி, அதிகம் பேச பிடிக்காது.இப்படி எல்லாம் சொல்ல ஆசை தான் ஆனால் நான் ரொம்ப பேசுவேன்,,எந்தவித அடையாளமும் இல்லாமல் வாழ பிடிக்கும். அடையாளம் இல்லாததால் பெரும்பாலும் எனக்கு கோவம் வராது. எப்பொழுதும் நடுநிலைமையாக தான் பேசுவேன்.

நான் மிக பெரிய செலவாளி. என் கையில் காசு தங்காது.

இப்ப மட்டும் உன் பதிவில் என்ன கருத்து இருக்குனு கேப்பிங்க...அது என் காதுலயும் விழுது என்ன செய்றது வச்சுகுட்டா இல்லைன்குறேன்..

கீழே எனது லொள்ளுகள்:

1:"காலைல எந்திரிச்சி மொபைல்ல எடுத்து பாத்தா என் நண்பன்கிட்ட இருந்து ஒரு மெஸேஜ்.......அத நீங்களும் படிங்க!!!! ''உனக்குள் என் நினைவும் எனக்குள் உன் நினைவும், இருக்கும் வரை சத்தியமா சொல்றேன் நீயும் உருப்பட மாட்ட நானும் உருப்பட மாட்டேன்'' ''இப்போ சொல்லுங்க நாங்க ரெண்டு பேரும் உருப்புடுவோம்னு நினைக்கிறீங்க''??????????????????

2:
அன்புள்ள எதிர்த்த அப்பாட்மென்ட் பிகருக்கு..... எதிர்த வீட்டு பட்டெ. திருப்பதி லட்டெ; உன்னை "ஈ" பொன்று சுட்றி வருகிறேன். என்னை ஏற்று கொள்வாயா;... வானத்தையும் நிலவையும் பிரிக்க நினைப்பது அமவாசை. உன்னையும் என்னையும் பிரிக்க நினைப்பது உன் அம்மா வின் ஆசை;. மொட்டை மாடியில் பூத்த மொட்டெ. a.r.rahman பொட்ட மெட்டெ;. உன் கண்ணு போதை ஏத்துர ஜின்னு;. உன் முக்கு முந்திரி போட்ட கேக்கு;. உன் பல்லு polish போட்ட கல்லு;. உன் கழுத்து அதுல எழுத இல்ல எழுத்து;. நீ ஒரு வார்த்த பேசு. இந்த உலகமே எனக்கு தூசு...

அந்த பாலஸ்திநீய எப்புடிங்க..க கரெக்ட் பண்றது... கொஞ்சம் சொல்லுங்களேன்..


3:அட்வைஸ்-ங்குறதே அடுத்தவங்க பிரச்சனைல மூக்க நுழைப்பதுதான் ...!

4:அஜித்த ஓட்றவன் விஜய் ரசிகனா இருப்பான் ..ஆனா விஜய ஓட்றவன் மன்சூர் அலி கான் ரசிகனா கூட இருப்பான் !!


5:கதிர்வீச்சில் காணாமல் போகும் சிட்டுக்குருவி போல நவீனங்களில் கரைந்து போகும் என் பொழுதுகள்...


6:கக்கனின் 105வது பிறந்தநாள் விழாவில் வாசன் ,ஞானதேசிகன் பங்கேற்றனர்!அடடே ,ஒரு பெருந்தலைவரை ரெண்டு தறுதலைகள் வாழ்த்துகிறதே


7:பெண்களுக்கு மட்டும் கிடைக்காத ஒரு விஷயம் இப்ப நிறைய ஆண்களுக்கு கிடைப்பதில்லை ! #மீசைய முறுக்கிவிட்டு சுத்துறது ;)


8:தமிழகத்தில் தீர்க்கப்படாத பிரச்னைகள் எவ்வளவோ உள்ளன-ராமதாஸ் #முதலில்,சாதிக்கட்சியை ஒழிப்பதில் இருந்து ஆரம்பிக்கலாம் வாங்கண்ணே!


9:ஆங்கிலத்தை அவிழ்த்து விட்டுட்டு இந்தியை மட்டும் ஏன் தடுத்தாங்க #ஊர்ல மார்வாடி பொண்ணுக இருக்காங்க, இங்கிலாந்து ராணி பேத்தினு ஒன்னுமேயில்ல!

குவைத்ல ஒரு குவைத்தி என்னப்பாத்து ஒரு கேள்வி கேட்டான் "இந்த்த இந்தியன்...லேஸ் இந்த்த இந்தி மாயரப்" னு கேட்டான்...அதவாது நீ இந்தியன் அப்புறம் ஏன் உனக்கு இந்தி தெரியலன்னு கேட்டான்...

எனக்கு பதில் தெரியல...உங்களுக்கு தெரியுமா?

10:"சட்டையில் முதல் பட்டனை தப்பா போட்டா, அப்புறம் எல்லா பட்டன்னுமே தப்பா போய்டும் ... இதை சொன்னவர் நம்ம தெரு முக்குல டெய்லர் கடை வச்சுருக்குற மூர்த்தி...ஏன் ...தத்துவம்னா சாக்கரடீஸ் தான் சொல்லனுமா . மூர்த்தி சொல்ல கூடாதா?



11:காதல் என்பது சிக்ஸ்பேக் போல பராமரிக்க வேண்டும்...நட்பு என்பது தொப்பை போல தான வரும் ஆனா போகவே போகாது...

நம்ம கருத்து எப்புடிங்க....

இப்படிக்கு உங்கள் உங்கள் லொள்ளு பரத்...


12:பாசக்கயிற்றை வீசுற எமனும் பாசத்தை வீசுற வுமனும் பால் ஊத்தாமல் விட்டதா சரித்திரம் இல்லை (கேட்டதில் பிடித்தது )

நிஜம்மா என் தோழிகளெல்லாம் ரொம்ப நாட்டி...................... இப்ப அனுப்புன எஸ்.எம்.எஸ் நீங்களே பாருங்க............ ''அவளை காதலிக்க ''க்ளாசை''க் (class) கட்டடித்தேன்'' இன்று ''அவளை மறக்க க்ளாசில் (glass) கட்டிங்க் அடிக்கிறேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!! (வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு) #எனக்கு தோழியாய் வாய்த்த்வள் மிகவும் திறமைசாலி...

13:சொப்னசுந்தரி கார் பழசு....சிம்பு வெச்சிருந்த நயன இப்ப......# இது புதுசு.. :-)


14:ஒரே ஒரு பொய் போதும் முன்பு கூறிய அத்தனை உண்மையையும் சந்தேகிக்க ..

15:குப்பையை கிளறுவதில் போட்டி போடுவது கோழிகளும்,பக்கத்து வீட்டு பெண்மணிகளும் தான்!!

16:தொடை பட்ட இடம் மட்டும்தான் தொடைச்சு வெச்சா மாதிரி இருக்கு! # பைக்ல.!!

17:வாழ்கை ஒரு ஒன்வே ட்ராபிக் மாதிரி, திரும்பிப் பாக்கலாம், ஆனா திரும்பிப் போக முடியாது! #sms

18:நமக்கு அடிமைகள் கிடைக்கும் வரை நாம் விடுதலை ஆவதில்லை!!

19:வேற்று மொழியினர் அருகில் இருக்கையில் அவர்களைப் பற்றி அவதூறு கூறும்போது மட்டும் நம்மவர்கள் தூயதமிழ் பேசுகிறார்கள்!


20:பெண்களுக்கு வலிகளை தாங்கிக்கொள்ளும் சக்தியை காது குத்துவதிலிருந்து ஆரம்பித்து வைக்கிறோம்

இதுக்கு பெண்கள் அனைவரும் லைக் குடுத்துருங்கப்பா..

-லொள்ளு பரத்


21:கள்ளக்கடத்தல் செய்பவரைக்கூட மன்னித்துவிடலாம்,வீணாக காலத்தைக் கடத்துபவரை மன்னிப்பது கடினம்!

நானும் கொஞ்ச நாள் அப்படிதான் இருந்தேன்..


22:வெயிலைப் பற்றி ஒரு கவிதை சொல்லச்சொன்னார்கள்.மவுனமாய் இருந்துவிட்டேன் # ஊமைவெயில்

23:10 மணிக்கு தூக்கம் வருதுன்னு சொல்றதுதான் 23 வயசு பொண்ணோட மோசமான பொய் !#ஹி ஹி

24:மனைவியிடம் எந்தப் பொய்யும் சொல்லாதவன், மனைவியின் உணர்வுகளை மதிக்காதவனாய்த் தான் இருக்க வேண்டும்.! #அனுமானம்

25:கேள்விக்கும் சந்தேகத்திற்கு இடையே என்ன வித்தியாசம்? - இது கேள்வியா? சந்தேகமா?


26:காதலனுக்கு எப்பவுமே "குட்பை" சொல்லத் தெரியாது; காதலிக்கு எப்ப "குட்பை" சொல்லணும்னு தெரியாது.!

27:பார்க்குக்கு தனியா போனா ஒன்னு படுத்துனு தூங்கிடனும் இல்ல போகவே கூடாது இன்னாமா கடுப்பேத்துராங்கய்யா...

28: என் பர்த்டேக்கு ஒரு மாசத்துக்கு முன்ன ஒரு பொண்ணு பேர்ல ஐடிய ஓபன் பண்ணி அம்புட்டுபேருட்டயும் ஆசிர்வாதத்த வாங்கிபுடனும்.

29:"ஆக்சுவலி" என்று ஆரம்பிபவர்கள், தன் தவறு சரியென பெரிய லெக்சர் குடுக்கப்போறாங்க என்று அர்த்தம்...

30:கறிக்கோழி -80ரூ. கோழிக்கறி -120ரூ. #என்னடா இது அநியாயம்... ஒரு வார்த்தைய மாத்திப் போட்டதுக்கா 40ரூ அதிகமா கேக்கறீங்க

31:காலை நேரத்தில் முயலாகவும், வேலை நேரத்தில் ஆமையாகவும், மாலை நேரத்தில் தீயாகவும், கடிகாரங்கள் பணிசெய்கின்றன!


32:உலகின் மிகப் பெரிய கதை # ஐ தின்க் அது அனுமாருட்ட இருக்கறது


33:என் மனைவிக்கு எல்லா சுதந்திரமும் கொடுத்திருக்கிறேன் என்று கூறுவதும் ஆணாதிக்கமே..

34:மொழியின் திரவ வெளிப்பாடுதான் காறி உமிழ்வது போலும்

35:பெண் மீதான காதலும் வெற்றி மீதான வெறியும் ஆணுக்கு இல்லாதிருந்திருந்தால் பூமி வெறும் புல் மண்டி கிடக்கும் மைதானமாய் தானிருந்திருக்கும்

36:நான் செஞ்ச உப்புமால உப்பு போட மறந்துட்டேன், இப்ப நான் செஞ்சத உப்புமான்னு சொல்லலாமா? இல்லை சப்புமான்னு சொல்லலாமா...நீங்களே சொல்லுங்க..

37:வார்த்தைகள் காயப்படுத்தும் ஆனால் மௌனம் கொன்றுவிடும் # சைலென்ட் மோட்ல இருந்த என் செல்போன்ன காணோம் அவ்வ்வ்வ்

38:நேத்து பிரண்டோட போன்ல பெசிக்குட்டு இருந்தென் அப்ப அவன் சொன்னான் "செல்போன் டவர் அருகே சிக்னல் அதிகரிப்பது போல,மின்கம்பம் அருகே சார்ஜ் அதிகமானால் நன்றாயிருக்குல...(மூதேவிக்கு தமிழ்நாட்ல இருந்துகிட்டு ஆசையப்பாரு)...

39:கணக்கில் பணமில்லை என்றாலும் ,நல்ல வேளை ,காரி துப்பமா RECIEPT ஐ மட்டுமே துப்புகிறது ATM மெஷின்


40:கொளுத்தும் வெயிலுக்கு
குடைபிடித்து நடந்தபோதுதான்
அலைபேசியில் அழைத்தாய்...#
குடைக்குள் மழை!

41:ரகசியம் சொல்வதில் தவறு நிகழ்கையில்,ரகசியம்,ரகசியமாய் கசியத்தொடங்குகிறது!


42:நீ குழந்தைக்கு,சோறூட்டும் அழகைக்கண்டுதான் அழகுக்கு அழகூட்டுதல் எனும் சொல் பிறந்திருக்கக் கூடும்!

கொஞ்சம் நாளுக்கு முன்னாடி இதே டயலாக்க பேஸ்புக்ல போட்டதுக்கு...ஒரு கருமம் புடுச்ச நாய் இப்புடி கமெண்ட் போட்டுச்சு"மச்சி உன் ஆளுக்கு கல்யாணமாகி குட்டியும் போட்டுடாலான்னு"

நம்ம மாதிரியே தான் இருகான்கே நம்ம கூட்டாளியும்..


43:திருமணங்களில்,நிற்கவைத்து போட்டோ எடுப்பவர்களைவிட, நிற்கவைத்து வீடியோ எடுப்பவர்களே பொறுமையை அதிகம் சோதிக்கிறார்கள்!


44:சில திருமணங்கள் காலாகாலத்திலும்,சில காலங்காத்தாலயும் நடைபெறுகின்றன!


45:யார் என்ன வியாதி தனக்கு இருப்பதாக கூறினாலும் அதற்கான அறிகுறி தனக்கும் இருப்பாதாக உணர்வது தான் வயதாவதற்கான அறிகுறி

46:இயல்பாக இருத்தல் குற்றமாகவோ குறைச்சலாகவோ பார்க்கப்படுவது இயல்பாகிவிட்டது.


47:உங்களிடம் இருக்கும் பணத்தை உங்களால் எண்ண முடிந்தால், நீங்கள் பணக்காரர் இல்லையென்றே அர்த்தம்.!


48:காதல் கவிதைகள் கிறுக்கல்களாக இருப்பதற்கு, சிலர் காதலிக்கு பதிலாக மனைவியை நினைத்து எழுதுபதே காரணம்!


49:முள்ளை முள்ளால் எடுப்பது என்பது தண்ணியடித்து மட்டையானவர்களைத் தெளிவிக்க முகத்தில் தண்ணீர் தெளிப்பதே!

50:நான்கு மூலைகள் கொண்ட புத்தகத்தைப் புரிந்துகொள்ள ஒரு மூளையேனும் தேவைப்படுகிறது!

51:தகுதியற்றவர்களுக்கே எல்லாம் கிடைக்கிறதே எனறு தகுதியற்றவர்களே புலம்பிக் கொண்டிருப்பார்கள்.

52:ஒருவருடைய தனம்,அவருடைய மாமனாரிடமிருந்து பெறப்பட்டது எனும்போது அது 'சீ'தனம் எனப்படுகிறது!

53:வார்த்தகளை உமிழும் முன் அவைகள் சுவையானவை தானா என ஒருமுறை ருசி பார்த்து விடுங்கள்.! #அட்வைஸு

54:வெளிச்சத்துல பண்ணினா "தைரியம்". இருட்டுல பண்ணினா அது "குருட்டு தைரியம்".


55:வயிறு நிரம்பிய நிலையில்,அந்த ஹோட்டல் வத்தக்குழம்பு பிரமாதமா இருக்கும் என்பது போன்ற பேச்சுக்கள் அவ்வளவு ருசிகரமாய் இருப்பதில்லை!


56:மின்வெட்டைக் கண்டித்து என் அறையில் இருவர் தீக்குளிப்பு.. * Mr.தீக்குச்சி சம்பவ இடத்திலேயே மரணம்.. * Mr.மெழுகுவத்தியின் உயிர் ஊசல்.. :

பால்,பேருந்து கட்டணங்கள் உயர்ந்த இந்த ஆட்சியில்,குறைய ஆரம்பித்த ஒரே விஷயம் மொபைலின் பேட்டரி ஜார்ஜ் #TNpowercut

57:சொந்த ஊரிலே வருமானம் ஈட்டி மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிப்பவர்கள் பெரும் பாக்கியசாலிகள்.அவர்களை பாக்கிய"ஜாலி"கள் என்றும் அழைக்கலாம்!

58:சம்பாதிக்க ஆரம்பித்தபின் பணத்தாசை பிடித்து அலைவதே குடும்பப் பொறுப்புடன் இருப்பதாக பார்க்கப்படுகிறது. காலக்கொடுமை.

59:கைக்குழந்தையுடன் பேருந்தில் ஏறுபவர்களுக்கு இருக்கை தர எழுந்து நிற்பவர்கள்,மனதிலும் நிற்கிறார்கள்!!

60:மூணு வேளை சாப்பிட்டு ஒரு வேளை தூங்கினால் வீக் டே! ஒரு வேளை சாப்பிட்டு மூணு வேளை தூங்குனா அதுதான் சன்டே!!

61:"புரியல" எனும் வார்த்தை நம்மை சுதாரித்து கொள்வதற்கு பெரும்பாலும் உதவுகிறது #குபீர் குபீர்னு கேள்வி கேட்டு மடக்கறாங்க


62:எதையும் நோ சொல்லாமல் வாயில் போட்டவர்கள்,நோய்வாய்ப்படுகிறார்கள்!


63:கள்ளுண்ணாமை போதித்த காந்தி தாத்தா படம் போட்ட நோட்டு கொடுத்தாதான் டாஸ்மாக்குல சரக்கே தரான் # பாருக்குள்ளே நல்ல நாடு எங்க பாரத நாடு..

64:அரசு அலுவலக கட்டிட வசதிகளிலும் சாதி உண்டு, கலக்டர் ஆபிஸ் OC, RTO ஆபிஸ் BC, தாலுகா ஆபிஸ் MBC, அரசு மருத்துவமனை - ? வேண்டாம் விடுங்க.!

65:பணம் கொடுத்தால்தான் கடைக்காரர் மிட்டாய் கொடுப்பார் எனத் தெரிய ஆரம்பிக்கும்போது குழந்தைப் பருவம் முடிவுக்கு வருகிறது...

66: பெட்ரோலுக்கு பதிலாய் தண்ணீரில் ஓடும் காரை கண்டுப்புடிக்கிறாங்களாம், அதான் ஏற்கனவே கப்பல் இருக்கே.!

67:பாஸ்வேர்ட் டைப்பும் போது இருக்கும் கவனம் பேசும் போதும் இருந்தால் உறவுகள் பாதிக்காது.!

68:கல்யாணத்தை கால்கட்டு என்கிறார்கள், ஆனால் கணவர்கள் அதிகமாக கையைத்தான் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.!

69: 18 வருட பள்ளிப்படிப்பு முடிந்து வெளியே வருகையில், எனக்கு, தெளிவாக தெரிந்த ஒரே விஷயம் லீவ் லெட்டர் எழுதுவது மட்டும் தான்.!

70:கிறுக்குத்தனம் என்பது எதையாவது இப்படி கிறுக்குவது தான்!I


-உங்கள் லொள்ளு பரத்...


No comments:

Post a Comment